தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 10 Jun 2023 12:15 AM IST (Updated: 10 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தில் தாட்கோ மூலம் உறுப்பினர் அட்டை பெற்ற தூய்மை பணியாளர்களின் குழந்தைகளின் எவரேனும் பிளஸ்-2 வகுப்பு 2022-2023 கல்வியாண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பின் அதில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்க வேண்டி உள்ளது, எனவே பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளின் விவரங்களுடன் மதிப்பெண் பட்டியல் மற்றும் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டை நகலுடன் விருதுநகர் தாட்கோ மேலாளர் அலுவலகத்தினை வருகிற 20-ந் தேதிக்குள் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்கள் அணுகுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Next Story