குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகள் நூதன போராட்டம்
குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகள் நூதன போராட்டம் நடத்தினர்.
குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகள் நூதன போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை நகரம் முழுவதிலும் சேகரமாகும் குப்பைகள் புனல்காடு கிராமம் அருகே உள்ள மலையடிவாரத்தில் கொட்டும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புனல்காடு கிராம மக்கள் கடந்த 13-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 10-வது நாளான நேற்று, மலையடிவாரத்தில் இயற்கை சூழல் பாதிக்கப்படுவதை எடுத்துரைக்கும் வகையில் அப்பகுதி குழந்தைகள் கைகளில் இலை, தழைகள், மரக்கன்றுகளை கையில் ஏந்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இயற்கையான கிராமப் பகுதியில் அதிக அளவில் குப்பைகளை கொட்டுவதால், தங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று குழந்தைகள் தெரிவித்தனர்.
இந்த தொடர் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் டி.கே. வெங்கடேசன், எஸ்.பலராமன், வக்கீல் எஸ்.அபிராமன் உதயகுமார், சாமிக்கண்ணு, புனல் காடு செல்வம், முருகையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.