விடுமுறையையொட்டிகோத்தகிரி சிறுவர் பூங்காவில் குவிந்த குழந்தைகள்-ஊஞ்சல், சீசா உள்ளிட்டவைகளை விளையாடி மகிழ்ந்தனர்


விடுமுறையையொட்டிகோத்தகிரி சிறுவர் பூங்காவில் குவிந்த குழந்தைகள்-ஊஞ்சல், சீசா உள்ளிட்டவைகளை விளையாடி மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி நேரு பூங்காவில் உள்ள சிறுவர் விளையாட்டுப் பூங்காவில் பொருத்தப்பட்டுள்ள புதிய விளையாட்டு உபகரணங்களில் ஏராளமான குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி நேரு பூங்காவில் உள்ள சிறுவர் விளையாட்டுப் பூங்காவில் பொருத்தப்பட்டுள்ள புதிய விளையாட்டு உபகரணங்களில் ஏராளமான குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்.

சிறுவர் விளையாட்டு பூங்கா

கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் உள்ள நேரு பூங்கா கோத்தகிரியில் உள்ள சுற்றுலாத்தலங்களில் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் அழகிய புல் தரைகள் ரோஜா பூந்தோட்டம், வண்ண மலர்கள், சிறுவர் விளையாட்டு பூங்கா, நூற்றாண்டு பழமை வாய்ந்த பழங்குடியினர் கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனோர் அம்மனோர் கோவில் ஆகியவை அமைந்துள்ளன. இந்த பூங்காவைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.இது மட்டுமின்றி உள்ளூர் பொது மக்களின் முக்கிய பொழுது போக்கு அம்சமாக இந்த பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டுப் பூங்கா விளங்கி வருகிறது.

இந்தநிலையில் வரும் கோடை சீசனுக்கு பூங்காவை தயார்படுத்தும் வகையில் பூங்காவை மேம்படுத்த 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. பூங்காவில் கடந்த மே மாதம் வண்ண விளக்குகளுடன் கூடிய செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டது.

விளையாடி மகிழ்ந்த சிறுவர்கள்

மேலும் சிறுவர் விளையாட்டுப் பூங்காவில் குழந்தைகளை கவரும் வகையில் 9 வகையான புதிய விளையாட்டு உபகரணங்களும் பொருத்தப்பட்டன. வார இறுதி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய கடந்த 2 நாட்களாக நேரு பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களின் வருகையும் அதிகரித்து காணப்பட்டது. சிறுவர் விளையாட்டுப் பூங்காவில் ஏராளமான குழந்தைகள் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சீசா, ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களில் ஆர்வத்துடன் விளையாடி மகிழ்ந்தனர். பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்று சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. இது மட்டுமின்றி மக்காத குப்பைகளைக் கொண்டு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள காட்டெருமை, மான், முயல் உள்ளிட்ட வனவிலங்குகளின் சிற்பங்கள் முன் நின்றும், செயற்கை நீரூற்றுக்கு அருகில் நின்றும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துச் சென்றனர்.


Next Story