வீட்டிலேயே சிறுதானிய உணவுகளை தயாரித்து வழங்கினால் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கும்


வீட்டிலேயே சிறுதானிய உணவுகளை தயாரித்து வழங்கினால் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கும்
x

வீட்டிலேயே சிறுதானிய உணவுகளை தயாரித்து வழங்கினால் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.

திருப்பத்தூர்

வீட்டிலேயே சிறுதானிய உணவுகளை தயாரித்து வழங்கினால் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.

இருதய பரிசோதனை முகாம்

திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கு இலவச இருதய பரிசோதனை மருத்துவ முகாம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் நடந்தது.

கலெக்டர் பாஸ்கரபாண்டியன் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கர்ப்பிணி தாய்மார்களின் உயிரை பாதுகாப்பது மிகவும் முக்கியம். ஏனென்றால் இரண்டு உயிர்கள் சம்பந்தப்பட்டது மற்றும் இரண்டு குடும்பங்களின் எதிர்கால வாழ்வை சார்ந்துள்ளது. அதனால்தான் கருவுற்ற தாய்மார்களின் நலனில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.

அனைவரும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உணவுகளில் கீரை, காய்கறிகள், பழங்கள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அரிசியை இரண்டு முறை பாலிஷ் செய்யும் போது நெல்லுடன் சேர்ந்துள்ள சத்துப் பொருட்கள் வெளியேறி விடுகின்றன. இதனை நாம் உட்கொள்ளும் போது நமக்கு தேவையான சத்துப் பொருட்கள் நம்முடைய உடலில் சேர்வதில்லை.

வீட்டிலேயே...

முளைக்கட்டிய கோதுமை, பாதாம், பிஸ்தா போன்ற பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் சத்துமாவினை கடைகளில் வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் வீட்டிலேயே கம்பு, ராகி போன்ற சிறுதானிய உணவு பண்டங்களை தயார் செய்து வழங்கினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எந்த ஒரு உடல் உபாதைகளும் ஏற்படாது.

மருத்துவர் பரிந்துரைக்கின்ற அனைத்து விதமான மருத்துவ ஆலோசனைகளையும் கேட்டு அதன் மூலமாக பயன்பெற்று, நீங்கள் அனைவரும் நலமோடு வாழ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் 258 கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில், அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் சிவகுமார். அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் பிரபாகரன், வட்டார மருத்துவ அலுவலர்கள் மீனாட்சி, சௌந்தர்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story