குழந்தைகள் அறிவியல் மாநாடு:நாகலாபுரம் அரசு கல்லூரி பேராசிரியர் பங்கேற்கிறார்
குஜராத்தில் நடைபெறவுள்ள குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் நாகலாபுரம் அரசு கல்லூரி பேராசிரியர் பங்கேற்கிறார்.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை சார்பில் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து கொள்வது என்ற தலைப்பில் தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வருகிற 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டில் தமிழகத்திலிருந்து 30 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகிறது. மேலும் 30 குழந்தை விஞ்ஞானிகளும் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொருளாதாரத்துறை தலைவரும், உதவி பேராசிரியருமான சுரேஷ்பாண்டி உள்ளிட்ட 8 பிரதிநிதிகள் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்காக சுரேஷ் பாண்டியை கல்லூரி முதல்வர் கிரஷா ஜேக்கப் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story