பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம்


பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம்
x

பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம்

அரியலூர்

தாமரைக்குளம்

அரியலூர் மாவட்டம், பொய்யாத நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு கோவிலில் உள்ள பிரத்தியங்கிரா தேவிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பிரம்மாண்டமான மிளகாய் சண்டியாகம் நடைபெற்றது. இதையொட்டி யாகத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய் போடப்பட்டது. மேலும் ஜாதிக்காய், கடுக்காய், கருமிளகு, ரோஜா இதழ், முக்கனிகளான மா, பலா, வாழை ஆகியவற்றை யாகத்தில் போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பத்கர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story