பெண்ணிடம் சில்மிஷம்; வாலிபர் கைது


பெண்ணிடம் சில்மிஷம்; வாலிபர் கைது
x

ஏர்வாடி அருகே பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

ஏர்வாடி:

ஏர்வாடியை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் 53 வயது பெண்ணுக்கு அடிக்கடி போன் செய்து, முத்தம் தருமாறு கேட்டுள்ளார். இதுகுறித்து அந்த பெண், வாலிபரின் குடும்பத்தினரிடம் தெரிவித்ததால், அவர்கள் அவரை கண்டித்தனர். இந்தநிலையில் அந்த பெண் வேலை பார்க்கும் கடைக்குள் நுழைந்த வாலிபர், அவரை அவதூறாக பேசி, சில்மிஷம் செய்துள்ளார். மேலும் கத்திரிக்கோலை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, வாலிபரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story