ஓடும் ெரயிலில் பெண்ணிடம் சில்மிஷம்


ஓடும் ெரயிலில் பெண்ணிடம் சில்மிஷம்
x
சேலம்

சூரமங்கலம்:-

சேலத்தில் ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த அரசு கல்லூரி உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

உதவி பேராசிரியர்

சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த முகமது உசேன் மகன் சையது இப்ராகிம் (வயது 57). இவர், சேலம் அரசு கலை கல்லூரியில் உதவி பேராசிரியராக உள்ளார். இவர், நேற்று ஹூப்ளி செல்லும் ரெயிலில் எஸ் 3 பெட்டியில் பயணம் செய்தார்.

அப்போது அதே பட்டியில் பயணம் செய்த ஓசூரை சேர்ந்த 27 வயது பெண்ணிடம், இப்ராகிம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

கைது

இதுதொடர்பாக அந்த இளம்பெண், ரெயில்வே போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஓடும் ரெயிலில் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக உதவி பேராசிரியர் இப்ராகிமை கைது செய்தனர்.

இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story