சின்ன மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா


சின்ன மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் சின்ன மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற இலுப்பைத்தோப்பு சின்ன மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் பலரின் குலதெய்வமாக விளங்கும் இக்கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 21-ந் தேதி தொடங்கியது. விழாநாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. திருவிழாவின் சிகர விழாவான 26-வது ஆண்டு தீமிதி உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, சக்தி கரகம் மற்றும் விரதம் இருந்து காப்பு கட்டிய ஏராளமான பக்தர்கள் மயிலாடுதுறை காவிரிக்கரையிலிருந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க வீதியுலாவாக கோவிலை வந்தடைந்தனர். வழியெங்கும் பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன்பு சக்தி கரகத்திற்கு தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் சக்தி கரகம் மற்றும் பக்தர்கள் இறங்கி தீமிதித்து தங்கள் நேர்த்தி கடனை பூர்த்தி செய்தனர். மேலும், பக்தர்கள் அலகு காவடி எடுத்தும், தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்தவாறும் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதி திருவிழாவை கண்டு தரிசனம் செய்தனர்.


Next Story