சின்னமனூரில் இளைஞர் திறன் திருவிழா: நாளை நடக்கிறது
சின்னமனூரில் இளைஞர் திறன் திருவிழா நாளை நடைபெறுகிறது
தேனி
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் வளர்ப்பு பயிற்சி திட்டத்தின் கீழ் சின்னமனூர் வ.உ.சி. தொழிற்பயிற்சி நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) இளைஞர் திறன் திருவிழா நடக்கிறது. இளைஞர்களின் திறனை மேம்படுத்தி அவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதே இந்த திட்டத்தின் நோக்கம்.
இளைஞர்கள் அதிக வேலைவாய்ப்புள்ள தொழில்கள் பற்றி தெரிந்து கொள்வதோடு, திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு மற்றும் தகவல்களை ஒருங்கே பெறுவதற்கு இந்த திறன் திருவிழா உதவியாக அமையும். எனவே வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Related Tags :
Next Story