சிறுமியை பலாத்காரம் செய்த சித்தப்பாவுக்கு ஆயுள் தண்டனை-அரியலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியை பலாத்காரம் செய்த  சித்தப்பாவுக்கு ஆயுள் தண்டனை-அரியலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு
x

சிறுமியை பலாத்காரம் செய்த சித்தப்பாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

அரியலூர்

பரோட்டா மாஸ்டர்

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவரது மனைவியின் அக்காளுக்கு குழந்தை பிறந்ததால் அவரது 9 வயது மகளை தனது தங்கையின் வீட்டில் விட்டு இருந்தார். இந்தநிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் பரோட்டா மாஸ்டரின் மனைவி வெளியூர் சென்றார். இந்தநிலையில் வீட்டில் இருந்த சிறுமியை அவரது சித்தப்பா பாலியல் பலாத்காரம் செய்தார்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் மகளிர் போலீசார் பரோட்டா மாஸ்டரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை அரியலூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் சிறுமியை கற்பழித்த பரோட்டா மாஸ்டருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் கற்பழிப்பு குற்றத்திற்காக ரூ.50 ஆயிரமும், கொலை மிரட்டலுக்கு ரூ.5 ஆயிரம், வீட்டில் அடைத்து வைத்தற்கு ரூ.1,000 என மொத்தம் ரூ.56 ஆயிரம் அபராத தொகை வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக தமிழக அரசு ரூ.7 லட்சம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

தீர்ப்பை கேட்ட பரோட்டா மாஸ்டரின் தாயார் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதையடுத்து, குற்றவாளியான பரோட்டா மாஸ்டரை பலத்த பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.


Next Story