மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
திருப்பூர்
வீரபாண்டி,
சித்திரை மாதம் முதல் தேதியன்று தமிழக மக்கள் அனைவரும் தமிழ் புத்தாண்டு வருடப்பிறப்பாக கொண்டாடி வருகின்றன. தமிழ் வருட பிறப்பு அன்று அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகளும், ஆராதனைகளும் செய்யப்பட்டு வருகிறது. ஆண்டிபாளையம் மாரியம்மன் கோவிலில் நேற்று சித்திரை மாதம் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து அவனாசி காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து தீர்த்த கலசங்களை எடுத்து வந்தனர். இன்று(வெள்ளிக்கிழமை) மதியம் ஆண்டிப்பாளையம் மாரிஅம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் செய்து அலங்கார பூஜைகள் நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story