மேல்மலையனூர்அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ராபவுர்ணமி விழா


மேல்மலையனூர்அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ராபவுர்ணமி விழா
x
தினத்தந்தி 6 May 2023 12:15 AM IST (Updated: 6 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ராபவுர்ணமி விழா நடைபெற்றது.

விழுப்புரம்


மேல்மலையனூர்,

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடைபெற்றது. இதையொட்டி கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வெள்ளிக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். உற்சவ அம்மனுக்கு மாரியம்மன் அலங்காரம் செய்யப்படு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.

தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு விளக்குபூஜை செய்யும் இடத்திற்கு அம்மன் எழுந்தருளியவுடன் பெண்கள் விளக்கு பூஜை செய்தனர். அங்கு அம்மனுக்கு குங்குமம், மற்றும் பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் சங்கீதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story