முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா முளைப்பாரி
புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா முளைப்பாரி கும்மிப்பாட்டு நடந்தது.
தென்காசி
வாசுதேவநல்லூர்:
புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் உள்ள நாக கன்னியம்மன், பெரியபாளையத்து பவானி அம்மன், பால நாகம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 4-ம் திருநாளன்று கும்மியடி திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு முளைப்பாரி பாடல்கள் பாடி கும்மியடித்தனர்.
முன்னதாக மாலையில் முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு பால், சந்தனம், தயிர், நெய் உள்பட 21 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story