சொக்கன்குடியிருப்பு அதிசய மணல்மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சொக்கன்குடியிருப்பு அதிசய மணல்மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
சொக்கன்குடியிருப்பு அதிசய மணல்மாதா திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தென் மாவட்டங்களில் புகழ்மிக்க ஆலய திருவிழா கொடியேற்றத்தையொட்டி திருப்பயணம் நடைபெற்றது. தொடர்ந்து அருள்தந்தை நெல்சன் பால்ராஜ் தலைமையில், செட்டிவிளை பங்குதந்தை ததேயுஸ் ராஜன், சொக்கன்குடியிருப்பு அதிசய மணல்மாதா திருத்தல அதிபர் தந்தை ஜான்சன்ராஜ் கலந்து கொண்டு திருவிழா கொடியேற்றினார். திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீரும் நடைபெற்றது. கொடியேற்றத்தில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story