கிறிஸ்தவ மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கிறிஸ்தவ மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

கிறிஸ்தவ மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

சிறுபான்மையினர் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை நிறுத்திய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டு வருவதை கண்டித்தும் நேற்று கரூர் ஜவகர் பஜாரில் உள்ள தலைமை தபால் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிறிஸ்தவ மக்கள் இயக்க நிறுவன தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி துணைத்தலைவர் நகோமி, மாநில துணைத்தலைவர் யோகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story