விருத்தாசலத்தில் கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி மும்முரம்


விருத்தாசலத்தில்    கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.

கடலூர்


விருத்தாசலம்,

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையையொட்டி ஏசு பிறப்பை சித்தரிக்கும் வகையில் ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்படுவது வழக்கம்.

இந்த குடில்களில் ஏசு, மரியாள், யோசேப்பு, இடையர்கள், தேவதூதர்கள், மூன்று அரசர்கள் ஆகியோர் சித்தரிக்கப்படுவர். இவர்களோடு பெத்லகேமின் விண்மீன், ஒட்டகம், ஆடு, கழுதை முதலிய ெபாம்ைமகளும் இடம் பெறும். இவற்றை செய்ய தாள், அட்டை, கல் என பல்வேறு பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.

வர்ணம் தீட்டும் பணி

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் குடில் பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்யும் பணியில் தொழிலாளர்கள் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதன்படி விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டை பகுதியில் குழந்தை ஏசு, மரியாள், தேவதூதர்கள், இடையர்கள் உள்ளிட்ட பொம்மைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது பொம்மைகளுக்கு வர்ணம் தீட்டும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி

இதுகுறித்து பொம்மைகள் தயாரிக்கும் தொழிலாளி சந்தோஷ் என்பவர் கூறுகையில், பருவமழையால் கடந்த மாதம் பொம்மைகள் தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டது. தற்போது மழை நின்றதால் பொம்மைகள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். இங்கு தயாரிக்கப்படும் பொம்மைகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மும்பை உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து பொம்மைகளை வாங்கி செல்கின்றனர். தேவாலயங்களில் குடில் அமைத்து இருந்தாலும், கிறிஸ்துமஸ் அன்று வீடுகளில் குடில்களை பெரும்பாலானவர்கள் அமைப்பார்கள். இவர்களை எதிர்நோக்கி தற்போது குடில் பொம்மைகளை விற்பனை செய்து வருகிறோம்.

அந்த வகையில் ஏசு பிறப்பை உணர்த்தும் வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று வீடுகளில் குடில்களில் வைப்பதற்காக, 18 பொம்மைகள் உள்ள ஒரு செட் பொம்மை ரூ.750 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றார்.


Next Story