கிறிஸ்துமஸ் விழா
நெல்லை வருங்கால வைப்புநிதி நிறுவன அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.
திருநெல்வேலி
நெல்லை வருங்கால வைப்புநிதி நிறுவன அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. மண்டல ஆணையாளர் சச்சின் ஷெட்டி தலைமை தாங்கினார். கே.இந்திரா வரவேற்று பேசினார். ராமநாதபுரம் திருமண்டல போதகர் ஜான்சன் சாமுவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார்.
உதவி ஆணையாளர் ஷாஜி, கணக்கு அதிகாரி கவுரி பாஸ்கர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் அலுவலக ஊழியர்கள், குழந்தைகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை சுதா ஆரோக்கிய மேரி, இந்திரா, ராஜா பிரபுதாஸ் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story