திருத்துறைப்பூண்டி தூயஅந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
திருத்துறைப்பூண்டி தூயஅந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் வின்சென்ட் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். விழாவில் திருத்துறைப்பூண்டி புனித லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தை பிரான்சிஸ்சேவியர், மற்றும் கிறிஸ்தவ நல்லிணக்க மாவட்ட பொருளாளர் ஏ.ஆர்.ஜான் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள், கேக்குகளை வழங்கினர். விழா ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் விமலா, பள்ளியின் செயலாளர் ஹெலன் இமாக்குலேட், விளையாட்டு ஆசிரியர் பாரூக், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் வால்டர்டான்போஸ்கோ மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். இதில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், கேக்குகளும் வழங்கப்பட்டன. விழாவில் மாணவ- மாணவிகளுக்கு கிறிஸ்துமஸ் விழாவை பற்றி பங்குத்தந்தை எடுத்து கூறினார். முன்னதாக மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.