கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
களக்காட்டில் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழாவில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
களக்காடு:
களக்காடு கடம்போடுவாழ்வு செயிண்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. ஜோசப் கல்வி நிறுவனங்களின் தலைவர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். மாணவி கிறிஸ்டி திருவிவிலியம் வாசித்தார். கல்லூரி பாடல் குழுவினர் இறைவணக்கம் பாடினர். பெருமாள்குளம் சேகர குரு பெனர்ட் ஜெபம் செய்து விழாவை தொடங்கி வைத்தார். மாணவி இந்திரா வரவேற்று பேசினார். தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழைகளுக்கும், முதியவர்களுக்கும் புத்தாடை மற்றும் நல உதவிகளை வழங்கினார். மாணவிகளுக்கு இனிப்புகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன. விழாவில் பாளையங்கோட்டை ரோஸ்மேரி கல்லூரி முதல்வர் ஜெனதா ராணி, ஜோசப் கல்லூரி முதல்வர் குமரேசன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஏர்வாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிய கழிப்பறை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவிகளுக்கு பொது அறிவு சம்பந்தமான கேள்விகள் கேட்டு பரிசுகளை வழங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணைத்தலைவர் செல்லப்பாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர் நம்பித்துரை, ஏர்வாடி நகர தலைவர் ரீமாபைசல், தி.மு.க. ஏர்வாடி செயலாளர் சித்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.