விழுப்புரம் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் சீரமைப்பு பணிக்கு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


விழுப்புரம் மாவட்டத்தில்  கிறிஸ்தவ தேவாலயங்கள் சீரமைப்பு பணிக்கு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்    கலெக்டர் தகவல்
x

விழுப்புரம் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் சீரமைப்பு பணிக்கு அரசு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்



விழுப்புரம் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் சீரமைப்பு பணிக்கு அரசு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேவாலயங்கள் சீரமைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேவாலயங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் தேவாலய கட்டிடத்தின் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு 10-12 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சமும், 15-20 வருடமாக இருப்பின் ரூ.2 லட்சமும், 20 வருடத்திற்கு மேல் இருப்பின் ரூ.3 லட்சமும் நிதி உதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கு கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடமானது தேவாலயத்தின் பெயரிலேயே பதிவுத்துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். தேவாலய சீரமைப்பு பணிக்கு வெளிநாட்டில் இருந்து எந்தவித நிதி உதவியும் பெறப்படவில்லை என்பதற்கான சான்றிதழ் அளிக்க வேண்டும்.

நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்

மேலும் நிதி உதவி பெற விரும்புவோர் அதற்கான விண்ணப்பத்தை www.bcmbcmw@tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கட்டிடத்தின் வரைபடம், திட்ட மதிப்பீடு அறிக்கை, பழுதடைந்த கட்டிடத்தின் புகைப்பட நகல், கட்டிடம் தேவாலயத்தின் செயல்பாடு குறித்து உள்ளாட்சி அமைப்பிடமிருந்து பெறப்பட்ட சான்று,

அரசு வழங்கும் நிதியை விட திட்ட மதிப்பீடு அதிகமாக இருப்பின் அதிகமாக உள்ள தொகை எவ்வாறு ஈடு செய்யப்படும் என்ற சான்று, தேவாலய கட்டிடத்தின் ஸ்திர தன்மை சான்று (Stability Certificate Form A B C E வடிவத்தில் இருக்க வேண்டும்) மற்றும் எவ்வகையான பழுதுபார்ப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது என்ற முழு விவரங்களுடன் விண்ணப்பத்தை 3 பிரதிகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story