விஜய்-அஜித் படங்கள் வெளியீடு: திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு


விஜய்-அஜித் படங்கள் வெளியீடு: திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு
x

விஜய்-அஜித் படங்கள் வெளியீடு: திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு

ஈரோடு

நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படமும், நடிகர் அஜித் நடித்த 'துணிவு' திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று திரைக்கு வந்தது. இந்த 2 நடிகர்களின் ரசிகர்களும் நேற்று முன்தினத்தில் இருந்தே ஆரவாரத்துடன் திரைப்படங்களை வரவேற்றனர். ரசிகர்களிடையே மோதல் உருவாகுவதை தடுக்கும் வகையில் திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ஈரோடு மாநகரில் 11 திரையரங்குகள் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 37 திரையரங்குகளில் வாரிசு, துணிவு ஆகிய 2 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அதில் ஒன்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ள திரையரங்குகளில் 2 திரைப்படங்களும் திரையிடப்பட்டன. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அனைத்து திரையரங்குகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.


Next Story