மினிவேன் மோதி சினிமா லைட்மேன் பலி


மினிவேன் மோதி சினிமா லைட்மேன் பலி
x
தினத்தந்தி 27 April 2023 6:41 PM IST (Updated: 28 April 2023 12:20 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே மினிவேன் மோதி சினிமா லைட்மேன் பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த குடிசைக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் தயாநிதி (வயது 35),

இவர் சென்னையில் சினிமா லைட்மேனாக வேலை செய்து வந்தார். இவருக்கு சரண்யா என்ற மனைவியும், சரண்ராஜ் (4) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் தயாநிதி சொந்த ஊருக்கு வந்து இருந்தார். பின்னர் காய்கறி வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் ஆரணிக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

விண்ணமங்கலம் அருகே செல்லும்போது மினிவேனை ஓட்டி வந்த டிரைவர் திடீரென திருப்பி உள்ளார். அப்போது பக்கவாட்டில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மினிவேன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தயாநிதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story