சிலம்பாட்ட போட்டி


சிலம்பாட்ட போட்டி
x

பி.கே.எம்.மூக்கையாத்தேவர் நூற்றாண்டு விழாவையொட்டி சிலம்பாட்ட போட்டி நடந்தது.

மதுரை

உசிலம்பட்டி,

கல்வி தந்தை பி.கே.எம். மூக்கையாத்தேவர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாப்பாபட்டியில் தமிழ்நாடு சிலம்பாட்டக்கழகம் சார்பில் பாரம்பரிய விளையாட்டுப்போட்டி நடைபெற்றது. ஒரு கம்பு, இரு கம்பு, வாள் வீச்சு, வேல் வீச்சு, சுருள் வீச்சு ஆகிய போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டியை தமிழ்நாடு சிலம்பாட்டக்கழக தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் பொன்சங்கரமூர்த்தி ஒருங்கிணைத்தார். இப்போட்டியில் எல்லீஸ்நகர், செல்லூர், ஆழ்வார்புரம், கோவில்பாப்பாகுடி, தேனூர், திருவேடகம், சோழவந்தான், செக்கானூரணி, கருமாத்தூர் மூணான்டிபட்டி, வடக்கம்பட்டி, கோவிலாங்குளம், நத்தப்பட்டி செல்லம்பட்டி, உசிலம்பட்டி, பசும்பொன் நகர், மற்றும் பசுக்காரன்பட்டி ஆகிய கிளைகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் கலந்துகொண்டனர்.

சிலம்ப போட்டியினை ஓய்வு பெற்ற வரித்துறை அதிகாரி சம்பத், தடயவியல்துறை முன்னாள் இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசும் சான்றிதழ்களையும் விழாக்குழுவினர் முன்னாள் எம்.எல்.ஏ.டாக்டர் முத்துராமலிங்கம் மற்றும் சீர் மரபினர் நலச் சங்க தலைவர் டாக்டர் ஜெபமணி ஆகியோர் வழங்கினர்.


Related Tags :
Next Story