நியாய விலை கடையை இடமாற்றம் செய்ததால் பொதுமக்கள் சாலை மறியல்


நியாய விலை கடையை இடமாற்றம் செய்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
x
திருவண்ணாமலை

இரவோடு இரவாக கூட்டுறவு நியாய விலை கடையை இடமாற்றம் செய்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இரவோடு இரவாக இடமாற்றம்

திருவண்ணாமலை டவுன் பேகோபுர தெருவில் கடந்த 30 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் கூட்டுறவு நியாய விலை கடை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த மழையின் போது நியாய விலை கடையில் இருந்த பொருட்கள் மழைநீரில் நனைந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து திருவண்ணாமலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக இரவோடு இரவாக இந்த நியாய விலை கடையை கூட்டுறவுக்கு சொந்தமான இடத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் பேகோபுர தெரு பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ½ மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை வட்ட வழங்கல் அலுவலர் முருகன் மற்றும் அலுவலர்கள், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story