கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x

சோளிங்கரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட கீழாண்டமோட்டூர் பகுதியில் நகராட்சி பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் மற்றும் காய்ச்சல் ஏற்படுகிறது,

இந்த கழிவுநீர் விவசாய நிலத்துக்கு செல்லாமல் இருக்க ஓடை பிள்ளையார் கோவில் அருகே கால்வாயில் மண் கொட்டப்பட்டது. இதனால் 17-வது வார்டு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

கால்வாயில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நிரந்தரமாக கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சோளிங்கர் பரவத்தூர் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி ஆணையர் பரந்தாமன், நகராட்சி துணைத்தலைவர் பழனி, சோளிங்கர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கழிவுநீர் செல்ல கால்வாய் அமைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story