வேகத்தடையில் பிரதிபலிப்பான் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


வேகத்தடையில் பிரதிபலிப்பான்  அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x

வேகத்தடையில் பிரதிபலிப்பான் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

கன்னியாகுமரி

சங்கராபுரம்,

சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செம்பராம்பட்டு கிராமம் அருகே உள்ளது. இந்த பள்ளியின் அருகே உள்ள சாலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் இந்த வேகத்தடை இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் பிரதிபலிப்பான் அமைக்கப்படவில்லை. மேலும் அப்பகுதியில் மின்விளக்கு வசதியும் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் செம்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஒருவர் நேற்று இரவு வேகத்தடையில் சிக்கி கீழே விழுந்து காயம் அடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மாரியப்பன் என்பவரின் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வேகத்தடையில் பிரதிபலிப்பான் அமைக்க வேண்டும். மேலும் மின்விளக்கு வசதியும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கூறி கோஷங்களை எழுப்பினர். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.




Next Story