பாதாள சாக்கடை உந்து நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


பாதாள சாக்கடை உந்து நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 28 April 2023 12:15 AM IST (Updated: 28 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாதாள சாக்கடை உந்து நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சி 30-வது வார்டுக்குட்பட்டது ஆசிரியர் நகர். இப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகிலும், குடியிருப்புகளுக்கு மத்தியிலும் பாதாள சாக்கடை திட்டத்துக்கான உந்து நிலையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டு வரும் இப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 6.45 மணியளவில் அங்குள்ள மெயின் ரோட்டுக்கு திரண்டு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு அவர்கள் இரவு 7 மணிக்கு மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story