பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x

நெல்லை அருகே கோவில் சுற்றுச்சுவரை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நேற்று பொதுமக்கள் திடீரென சாலைமறியல் செய்தனர்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை அருகே கோவில் சுற்றுச்சுவரை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நேற்று பொதுமக்கள் திடீரென சாலைமறியல் செய்தனர்.

கோவில் சுற்றுச்சுவர்

நெல்லை அருகே பழைய பேட்டை கண்டியபேரி குளக்கரையில் சுடலைக் கோவில் உள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு இக்கோவிலை சுற்றி பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் எழுப்புவதற்கான ஆயத்தப் பணிகள் நடந்தது.

இந்நிலையில் வரவிருக்கும் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளத்தின் பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறையினர் நேற்று மேற்கொண்டனர். அப்போது குளத்தினை ஆக்கிரமித்து சுடலை கோவில் சுற்றுச்சுவர் ஆனது கட்டப்பட்டிருந்ததை பொதுப்பணித்துறையினர் பொக்லைன் எந்திரம் கொண்டு அகற்ற முயன்றனர்.

சாலை மறியல்

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டனர். கோவில் சுற்றுச்சுவரை அகற்றும் பணியில் ஈடுபட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகள் நீர்நிலை எல்கைகளை அளவீடு செய்த பின் கட்டுமான பணிகளை தொடர அறிவுறுத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். சுமார் 30 நிமிடம் நடந்த இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story