பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இந்த நிலையில், குடிநீர் வினியோகம் செய்ய மாற்று நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து துறைமங்கலத்தை சேர்ந்த பொதுமக்கள் 3 சாலை சந்திப்பு பகுதியில் நேற்று இரவு 9-வது வார்டு அ.தி.மு.க. கிளை செயலாளர் பிரபு தலைமையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.