குப்பை தீப்பிடித்து எரிந்ததால் பொதுமக்கள் அவதி


குப்பை தீப்பிடித்து எரிந்ததால் பொதுமக்கள் அவதி
x

வேலப்பாடியில் குப்பை தீப்பிடித்து எரிந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

வேலூர்

வேலூர் வேலப்பாடியில் செல்லும் கழிவுநீர் கால்வாயில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வந்தனர். இந்த குப்பைகள் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வேலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

தீ விபத்தினால் ஏற்பட்ட புகையால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் தீப்பற்றி எரிந்த இடத்தின் அருகில் டிரான்ஸ்பார்மர் இருந்ததால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது.


Next Story