சித்திரை திருவிழா


சித்திரை திருவிழா
x
தினத்தந்தி 28 April 2023 12:15 AM IST (Updated: 28 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வைகை அணை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

தேனி

ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சித்திரை திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. இந்த விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. பெண்கள் முளைப்பாரி எடுத்தும், தீச்சட்டி எடுத்தும் ஊர்வலமாக வந்தனர். விழாவின் கடைசி நாளான ேநற்று, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கினர். பெண்கள் தீச்சட்டியுடன் பூக்குழி இறங்கினர். மேலும் பக்தர்கள் சிலர் காளி வேடமணிந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story