சி.ஐ.டி.யு.-ஏ.ஐ.டி.யு.சி.யினர் ஊர்வலம்


சி.ஐ.டி.யு.-ஏ.ஐ.டி.யு.சி.யினர் ஊர்வலம்
x

சி.ஐ.டி.யு.-ஏ.ஐ.டி.யு.சி.யினர் ஊர்வலமாக சென்றனர்.

கரூர்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட குழுக்கள் சி.ஐ.டி.யு. மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் மே தின ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதனையொட்டி சி.ஐ.டி.யு. மற்றும் ஏ.ஐ.டி.யு.சி.யினர் கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே உள்ள காமராஜர் சிலை அருகில் இருந்து ஜவகர்பஜார் வழியாக லைட் ஹவுஸ் கார்னர் பொதுக்கூட்டத்திற்கு பேரணியாக சென்றனர். இதற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் குப்புசாமி முன்னிலை வகித்தார்.

இதனைத்தொடர்ந்து லைட் ஹவுஸ் கார்னரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் வடிவேலன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இந்த பொதுக்கூட்டத்தில் சி.ஐ.டி.யு. மற்றும் ஏ.ஐ.டி.யு.சி.யை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட உதவி செயலாளர் கலாராணி நன்றி கூறினார்.


Next Story