சி.ஐ.டி.யு. மகாசபை கூட்டம்


சி.ஐ.டி.யு. மகாசபை கூட்டம்
x

சி.ஐ.டி.யு. மகாசபை கூட்டம்

திருப்பூர்

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் மாவட்ட மோட்டார் ஆட்டோ மொபைல்ஸ் லேபர் யூனியன் (சிஐடியு) 12-வது மகாசபை கூட்டம் திருப்பூர் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் ரங்கராஜ் தொடக்கி வைத்தார். முன்னதாக சங்கத்தின் மூத்த உறுப்பினர் மருதாசலம் கொடி ஏற்றி வைத்தார். துணைத் தலைவர் சுதாசுப்பிரமணியம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அன்பு வேலையறிக்கையையும், பொருளாளர் அருண் வரவு செலவு அறிக்கையையும் முன்வைத்தனர்.

இதில் மோட்டார் தொழிலையும், தொழிலாளர்களையும் கடுமையாக பாதிக்கும் ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையேற்றம், சுங்கக் கட்டண உயர்வு, காப்பீட்டு கட்டண உயர்வு, வாகன அழிப்புக் கொள்கை, சேவைக் கட்டணம் தண்டத் தொகை மற்றும் போக்குவரத்து, காவல் துறையின் கெடுபிடிகள், இஎம்ஐ என்ற மாதாந்திர தவணை நெருக்கடி, மோட்டார் வாகன சட்டத் திருத்தம் ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் மாவட்டத் தலைவராக விஸ்வநாதன், செயலாளராக அன்பு, பொருளாளராக அருண், துணைத் தலைவர்களாக சுதாசுப்பிரமணியன், பாலு, ரமேஷ், துணைச் செயலாளர்களாக சரவணன், சம்பத், சர்புதீன் உள்பட மொத்தம் 15 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டனர்.

----


Related Tags :
Next Story