சி.ஐ.டி.யூ. சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:
திருவாரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்று கூலி நிலுவை தொகை
லாரியில் ஏற்றி செல்லும் போது உடையும் பாட்டில்களுக்கு தொழிலாளியின் கூலியில் இருந்து பணத்தை பிடித்தம் செய்யக்கூடாது. ஒப்பந்தக்காரர் பெட்டிக்கு ரூ.10 வீதம் கணக்கீட்டு கூலி வழங்க வேண்டும்.
ஏற்று கூலி 4 மாதமாக நிலுவை உள்ளதை உடனே வழங்க வேண்டும். கிடங்கில் குடிநீர் வசதி, மற்றும் அடையாள அட்டையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ சுமைப்பணி தொழிலாளர் சங்கம் அறிவித்திருந்தது.
ஆர்ப்பாட்டம்
அதன்படி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் கஜேந்திரன் தலைமை தாங்கினார்.
இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், சங்க மாவட்ட தலைவர் பாண்டியன் சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் பழனிவேல், மாவட்ட துணை செயலாளர் வைத்தியநாதன், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் லெனின் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.