தூத்துக்குடியில் சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும், மத்திய அரசு அறிவித்த 2021 - 2022-ம் ஆண்டுக்கான பஞ்சப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும், என்.டி.பி.எல். அனல் மின்நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களையும் நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்களாக அறிவித்து சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர ஊழியர்களுக்கும் வழங்கப்படுவது போல் உற்பத்தி ஊக்கத்தொகை வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 6 நாட்கள் தொடர்ச்சியாக பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு என்.டி.பி.எல் கிளை செயலாளர் அப்பாதுரை தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரசல், நிர்வாகிகள் ரவி தாகூர், மணவாளன், சிவபெருமாள், சுடலைமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி புறநகர செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.