சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம்
x

திருப்பத்தூரில் சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

இந்திய தொழிற்சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை தலைவர் சி.பொன்னுசாமி தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட தலைவர் காசி வரவேற்றார். இதில் மாவட்ட செயலாளர் எம்.சரவணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் குபேந்திரன்., உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் நகராட்சி, பேரூராட்சியில் அனைத்து பிரிவுகளிலும் காலியாக உள்ள பெரும் இடங்களை 'அவுட்சோர்சிங்' முறையில் பணி அமர்த்துவதை கைவிட வேண்டும். அரசாணை 152-ஐ ரத்து செய்யவேண்டும். ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை குறைந்தபட்ச கூலி அடிப்படையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் மாவட்ட குழு உறுப்பினர் ஜாபர்சாதிக், தாலுகா செயலாளர் காசி, தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் ஜோதி, தொழிற்சங்க கூட்டமைப்பு பொருளாளர் ரவி, விவசாய சங்க செயலாளர் காமராஜ், துணைச் செயலாளர் வீரபத்திரன் மற்றும் ஊரக வளர்ச்சிஇ உள்ளாட்சி துறை ஊழியர், துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.


Next Story