சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் திருப்பத்தூர் அரசு பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. கன்வினர் கேசவன் தலைமை வகித்தார். மின்சாரத்துறை பிரிவு பொதுச் செயலாளர் ஜோதி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் உடல்நலம் குறித்து விடுமுறை கடிதத்தை குடும்பத்துடன் கொடுக்க வந்த தொழிலாளியை கடிதத்தை வேலூரில் கொடு என்று கூறி அவமதித்து, தொழிலாளி அங்கேயே மயக்கம் போட்டு விழுந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதற்கு காரணமான மேலாளரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது. துணைச் செயலாளர் மயில்வாகனம், டாஸ்மாக் செயலாளர் என். சக்கரவர்த்தி, திருப்பத்தூர் பணிமனை செயலாளர் முகுந்தன், தர்மபுரி மண்டல தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பணி பனை பொறியாளர் முத்து நன்றி கூறினார்.