சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம்
x

தூய்மை பணிகளை அவுட்சோர்சிங் முறையில் விடும் முடிவை கண்டித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

பெரம்பலூர்

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பின் பெரம்பலூர் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் துறைமங்கலத்தில், அந்த அமைப்பின் மாநில செயலாளர் அகஸ்டின் தலைமையில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் தூய்மை பணிகளை அவுட்சோர்சிங் முறையில் தமிழக அரசு விடக்கூடாது என்பதை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் இன்று (திங்கட்கிழமை) தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதேபோல் அரசு துறைகளில் பணிகளை அவுட் சோர்சிங் முறையில் நியமனம் செய்யும் முடிவினை தமிழக அரசு கைவிட வேண்டும். இதனை கண்டித்து வருகிற 7-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அனைத்து தொழிற்சங்கங்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேற்கண்ட அரசு உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் பிரசார இயக்கம் நடத்தப்படும். தமிழக மின்சார துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஒப்பந்த மின் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யப்படும் என்று தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு தனது தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்தது. ஆனால் அவர்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டத்தை எங்கள் அமைப்பு சார்பில் விரைவில் நடத்தப்படும், என்றார்.


Next Story