சி.ஐ.டி.யு. மாவட்ட மாநாடு


சி.ஐ.டி.யு. மாவட்ட மாநாடு
x

சி.ஐ.டி.யு. மாவட்ட மாநாடு நடைபெற்றது.

கரூர்

சி.ஐ.டி.யு.வின் 9-வது மாவட்ட மாநாடு கரூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாநாட்டு வரவேற்பு குழுத்தலைவர் தண்டபாணி வரவேற்றார். சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும், கரூரின் ஜவுளித்தொழிலை பாதுகாக்க நூல் விலை உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட உதவிச்செயலாளர் ராஜாமுகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story