ஊட்டி பஸ் நிலையத்தில் சி.ஐ.டி.யு.வினர் வாகன நிறுத்த போராட்டம்
ஊட்டி பஸ் நிலையத்தில் சி.ஐ.டி.யு.வினர் வாகன நிறுத்த போராட்டம் நடத்தினர்.
நீலகிரி
ஊட்டி
விதிகளை மீறும் வாகனங்கள் மீது ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பது, 15 ஆண்டுகள் முடிந்த வாகனங்களை அழிப்பது என்று அரசு முடிவு செய்துள்ளது உள்ளிட்டவற்றை கைவிடக்கோரி சி.ஐ.டி.யு. சார்பில் நேற்று ஊட்டி பஸ் நிலையத்தில் வாகன நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தங்களது காரை பஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்திவிட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போக்கவரத்து மற்றும் பயணிகளுக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தியதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட பொருளாளர் நவீன்சந்திரன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஆதிரா, விவசாய சங்க தலைவர் கே.ராஜேந்திரன் உள்பட 17 பேரை ஊட்டி நகர மத்திய போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story