சி.ஐ.டி.யு. சங்கத்தினர் நூதன போராட்டம்


சி.ஐ.டி.யு. சங்கத்தினர் நூதன போராட்டம்
x

வண்ணார்பேட்டையில் சி.ஐ.டி.யு. சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

வண்ணார்பேட்டை:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து சி.ஐ.டி.யு. சங்கம் சார்பில் நேற்று காலையில் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் தங்கள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் குமரகுருபரன், துணை பொதுச்செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள், மாணவர்கள் நலன்கருதி நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் அரசு பஸ்களை இயக்க வேண்டும். போக்குவரத்து துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. முடிவில் மாவட்ட சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் ஜோதி நன்றி கூறினார்.


Next Story