சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்

தேனி

தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கட்டுமானம், முறைசாரா தொழிலாளர்களுக்கு இயற்கை மரண நிவாரணம் ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். மாவட்ட கலெக்டர் தலைமையிலான முறைசாரா தொழிலாளர் கண்காணிப்பு குழுவை மாதந்தோறும் நடத்த வேண்டும். ஆன்லைன் பதிவு, புதுப்பித்தலில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய கட்டுமான தொழிலாளர்கள் நலச்சங்க மாநிலக்குழு உறுப்பினர் பிச்சைமணி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாநில துணைத்தலைவர் செண்பகம், மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story