சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை தாமிரபரணி பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் மோகன் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
நெல்லை மண்டல பொதுச்செயலாளர் ஜோதி, மின்ஊழியர் மத்திய அமைப்பு மண்டல செயலாளர் கந்தசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் தொழிலாளர்களின் விடுப்புகளை மறுத்து ஆப்சென்ட் செய்து சம்பளத்தை பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும். பணி செய்யாமல் ஊதியம் பெறும் சில டிரைவர்கள், கண்டக்டர்களை பணிக்கு அனுப்ப வேண்டும். தொழிற்சங்க நிர்வாகியை தாக்கியதை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story