அம்மா உணவகத்தில் நகர்மன்ற தலைவர் ஆய்வு
சீர்காழி அம்மா உணவகத்தில் நகர்மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை
சீர்காழி:
சீர்காழி புதிய பஸ் நிலைய வளாகத்திற்குள் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அம்மா உணவகத்தில் பணிபுரியும் பணியாளர்களிடம் உணவகத்தை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்களுக்கு தரமான உணவு வழங்க கேட்டுக் கொண்டார். அப்போது பணியாளர்கள் அம்மா உணவகத்தில் செயல்படாமல் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை சரி செய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். இந்த ஆய்வின்போது மேலாளர் காதர்கான், நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயன், நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், வேல்முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story