குடிநீர் குழாய் உடைப்பை நகர மன்ற தலைவர் ஆய்வு


குடிநீர் குழாய் உடைப்பை நகர மன்ற தலைவர் ஆய்வு
x

ஆற்காட்டில் குடிநீர் குழாய் உடைப்பை நகர மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அழகன் தெரு, ராஜகோபால் தெரு ஆகிய தெருக்களில் உள்ள குடிநீர் குழாய்களில் கலங்கலான குடிநீர் வருவதாக அப்பகுதி மக்கள் நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ நகர மன்ற தலைவர் அப்பகுதிக்கு சென்று குடிநீர் குழாய்கள ஆய்வு செய்தார். அப்போது குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு அதன்காரணமாக கலங்கலாக நீர் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை உடனடியாக சீர் செய்தனர்.

நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, பொறியாளர் கணேசன், நகர மன்ற உறுப்பினர்கள் அனு அருண், செல்வம், தமிழ்ச்செல்வி கோபு, முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பென்ஸ் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story