நகரமைப்பு நிலைக்குழு கூட்டம்; மேயர் தலைமையில் நடந்தது


நகரமைப்பு நிலைக்குழு கூட்டம்; மேயர் தலைமையில் நடந்தது
x

நெல்லையில் நகரமைப்பு நிலைக்குழு கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு நிலைக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசுகையில், ''நெல்லை மாநகர பகுதிக்கு உட்பட்ட வணிக வளாகங்கள், ஆஸ்பத்திரிகள், குடியிருப்புகள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருக்கும் கட்டிடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சிக்கு பாத்தியப்பட்ட இடங்களை கண்டறிந்து அந்த இடத்தில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடங்கள், பூங்காக்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

மழைக்காலங்களில் மழைநீர் எங்கும் தேங்கி நிற்காமல் கழிவுநீர் ஓடைகளில் சீராக தங்கு தடையின்றி செல்லும் வகையில் கட்டிட உரிமையாளர்கள் வாறுகால் ஓடைகளை ஆக்கிரமிப்பு செய்திருந்தால், அவர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மாநகர பகுதியில் மழைநீர் தேங்கி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சாலை ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி, சாலை விரிவுபடுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும்'' என்று கூறினார்.

துணை மேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலை வகித்தார். நகரமைப்பு நிலைக்குழு தலைவர் சங்கீதா, நகரமைப்பு நிலைக்குழு உறுப்பினர்கள், மாநகராட்சி செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி ஆணையாளர்கள் வெங்கட்ராமன், ஜஹாங்கீர் பாஷா, உதவி செயற்பொறியாளர்கள் பைஜூ, ராமசாமி, இளநிலை பொறியாளர் திருஞானசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story