குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் ஆய்வு


குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் ஆய்வு
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் உள்ள தனியார் அரிசி ஆலைகளில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் ஆய்வு செய்தனர்

மயிலாடுதுறை

அரசு கொள்முதல் செய்த நெல்லை அரைத்து தரும் பணி கடந்த பிப்ரவரி மாதம் முதல் தனியார் நெல் அரவை ஆலைகளுக்கு ஒதுக்கப்பட்டது. அதன்படி அந்த ஆலைகள் அரசால் விதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுகிறதா? என்று சிவில் சப்ளை சி.ஐ.டி. மூலம் திடீர் ஆய்வு செய்யப்பட்டது. திருச்சி மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா உத்தரவின்படி மயிலாடுதுறை சரக துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீசன், மயிலாடுதுறை மாவட்ட சப்-இன்ஸ்பெக்டர் ராஜா பாரதிதாசன் மற்றும் போலீசார் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் நெல் அரவை ஆலைகளில் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தனர். முன்னதாக குத்தாலம் பகுதியில் உள்ள இரண்டு தனியார் அரிசி ஆலைகளிலும், தொடர்ந்து மயிலாடுதுறை பகுதியில் உள்ள அரிசி ஆலைகளிலும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.


Next Story