வயல்கள் வழியாக இறந்தவர்களின் உடலை தூக்கி செல்லும் பொதுமக்கள்


வயல்கள் வழியாக இறந்தவர்களின் உடலை தூக்கி செல்லும் பொதுமக்கள்
x

வயல்கள் வழியாக இறந்தவர்களின் உடலை தூக்கி செல்லும் பொதுமக்கள்

தஞ்சாவூர்

தஞ்சை அருகே வயல்கள் வழியாக இறந்தவர்களின் உடல்களை தூக்கி செல்லும் கிராம மக்கள் மயானத்துக்கு சாலை வசதி வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

பாச்சூர் கிராமம்

தஞ்சைைய அடுத்த பாச்சூர் கிராமத்தில் வடக்கு ஆதிதிராவிடர் தெரு உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இறப்பவர்களின் உடல்களை மயானத்துக்கு எடுத்து செல்ல முறையான சாலை வசதி இல்லை. மயானத்துக்கு செல்லும் பாதை முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. மழைநீர் தேங்கி மண்பாதைகள் சேறும், சகதியுமாக மாறி உள்ளது. முறையான சாலை வசதி இல்லாததால் வயல்கள் வழியாக இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்லும் சூழல் நிலவி வருகிறது.

சாலை வசதி இல்லை

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில்:- மயானத்துக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லாததால் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வயல்கள் வழியாக உடல்களை எடுத்து செல்லும் அவல நிலை நிலவி வருகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம். ஆனால் தற்போது வரை முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மேலும், ஒவ்வொரு முறையும் இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்லும் போதும் மயானத்துக்கு செல்லும் பாதையில் உள்ள கருவேலமரங்கள், செடி, கொடிகளை அகற்றும் நிலை உள்ளது. இதனால் உடல்களை எடுத்து செல்பவர்களும், இறுதி சடங்கு செய்யவருபவர்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயானத்துக்கு செல்வதற்கு முறையான சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களது வலியுறுத்தல் ஆகும் என்றார்.


Next Story