செம்புளிச்சாம்பாளையத்தில் லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்


செம்புளிச்சாம்பாளையத்தில் லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்
x

செம்புளிச்சாம்பாளையத்தில் லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் அருகே உள்ள அத்தாணி பேரூராட்சிக்குட்பட்ட செம்புளிச்சாம்பாளையம் பகுதியில் கழிவுகளை கொட்டக்கூடாது என்று பேரூராட்சி நிர்வாகத்தால் அறிவிப்பு பலகை கடந்த மாதம் வைக்கப்பட்டது. இங்கு கழிவுகளை கொட்ட வரும் வாகனத்தின் மீதும், அதன் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இதை மீறி நேற்று முன்தினம் மாலை அந்த பகுதிக்கு கழிவுகளை ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கிராம நிர்வாக அலுவலர் கவிதா, நில வருவாய் ஆய்வாளர் பெரியசாமி, அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது கழிவுகளை ஏற்றி வந்தவர்கள், 'இனி இதுபோல் கழிவுகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும்' என்று உறுதி அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் லாரியை விடுவித்து அங்கிருந்து கலைந்துசென்றனர்.


Next Story